×

சூடான் நாட்டில் வாழும் மக்களுக்கு உதவும் வகையில் 100 உணவு பொருட்களை வழங்கியது இந்திய போர்க்கப்பல் ஐராவத்!!

டெல்லி : மிஷன் சாகர் இரண்டாம் திட்டத்தின் கீழ், 2020, நவம்பர் 2-ஆம் தேதி இந்திய போர்க் கப்பலான ஐராவத், சூடான் துறைமுகத்திற்குள் நுழைந்தது.  கோவிட்-19 தொற்று பரவலால் உலகெங்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு நட்பு நாடுகளுக்கு பல்வேறு வகையில் உதவிகளை செய்து வருகிறது. இதன் அடிப்படையில் இந்திய போர்க் கப்பலான ஐராவத், சூடான் நாட்டில் வாழும் மக்களுக்கு உதவும் வகையில் 100 டன் உணவு பொருட்களுடன் பயணம் மேற்கொண்டது.

கடந்த மே- ஜூன் மாதங்களில் மிஷன் சாகர் ஒன்றாம் திட்டத்தின்கீழ் இந்தியாவிலிருந்து மாலத்தீவுகள், மொரிஷியஸ், மடகாஸ்கர் மற்றும் கோமோரோ நாடுகளுக்கு உணவுப் பொருட்களும் மருந்துப் பொருட்களும் வழங்கப்பட்டன. மிஷன் சாகர் இரண்டாம் திட்டத்தின் கீழ் இந்திய போர்க்கப்பல் ஐராவத்தின் மூலம் சூடான், தெற்கு சூடான், ஜிபோடி மற்றும் எரித்ரியா ஆகிய நாடுகளுக்கு உணவுகள் வழங்கப்படும்.

Tags : Indian ,Irrawaddy ,Sudan , Sudan, People, Indian Warship, Irrawaddy
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்