×

இன்று மும்பை இந்தியன்சுடன் மோதல்: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா சன் ரைசர்ஸ்?

ஷார்ஜா: ஷார்ஜாவில் இன்று நடைபெறும் ஐபிஎல் டி20 தொடரின் கடைசி சுற்று போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை, எதிர்த்து சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி மோதுகிறது. நல்ல ரன் ரேட் உள்ளதால் இப்போட்டியில் வெற்றி பெற்றாலே, சன் ரைசர்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விடும். நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன. இன்று நடைபெறும் போட்டியில் சன் ரைசர்ஸ் வெற்றி பெற்றால், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். தற்போது புள்ளி பட்டியலில் 4ம் இடத்தில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, வெளியேறிவிடும். இதனால் இப்போட்டியை கொல்கத்தா அணி வீரர்களும் ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியை இன்று நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறது என்றே கூறவேண்டும். ஏனெனில் மும்பை அணிக்கு எதிரான கடைசி 10 போட்டிகளில், 5 போட்டிகளில் சன் ரைசர்ஸ் வெற்றி பெற்றுள்ளது. மும்பை பவுலர்கள் பும்ரா மற்றும் ட்ரென்ட் போல்ட் இந்த தொடரில் தங்களது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இருவரும் இணைந்து, இத்தொடரில் 43 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.  ஆனால் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா காயம் காரணமாக இன்றைய போட்டியிலும் ஆட மாட்டார் என்பது சற்றே பின்னடைவு என்றாலும் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், டி காக், ஹர்திக் பாண்டியா, கேப்டன் பொல்லார்டு என வலுவான பேட்டிங் ஆர்டர் உள்ளது. வார்னர், பேர்ஸ்டோ, ரித்திமான் சாஹா, மனீஷ் பாண்டே, கேன் வில்லியம்சன் என சன் ரைசர்சின் பேட்டிங் ஆர்டரும் வலுவானதாகவே உள்ளது. அனைவருமே இத்தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். வார்னர் இத்தொடரில் 444 ரன்களை குவித்துள்ளார். மனீஷ் பாண்டே 380 ரன்கள் எடுத்துள்ளார். பந்து வீச்சாளர்களில் ரஷீத் கான், சந்தீப் ஷர்மா, நதீம், நடராஜன் என இளையோர் படை துடிப்புடன் உள்ளது. கைவசம் நல்ல ரன் ரேட் உள்ள நிலையில், வெற்றி மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற போதும் என்பதால் பதற்றமில்லாமல் இப்போட்டியில் சன் ரைசர்ஸ் அணி களம் இறங்க உள்ளது.

பெங்களூரு அணிக்கும் பிளே ஆப் வாய்ப்பு
பெங்களூரு அணி நேற்று தோல்வி அடைந்தாலும் 19ஓவர் வரை ஆட்டத்தை கொண்டு சென்றது. தற்போது பெங்களூரு, கொல்கத்தா, அணிகள் தலா 14 புள்ளிகளுடன் உள்ளன. இதில்பெங்களூரு அணி கொல்கத்தாவை விட ரன்ரேட்டில் (-0.172) அதிகமாக உள்ளது. இதனால் பெங்களூரு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இன்று மும்பையை ஐதராபாத் வீழ்த்தினால் பிளே ஆப்க்கு தகுதி பெறும். கொல்கத்தா வெளியேறும். மாறாக ஐதராபாத் தோற்றால் கொல்கத்தாவுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

Tags : Clash ,Mumbai Indians ,Will Sunrisers , Clash against Mumbai Indians today: Will Sunrisers advance to play-off round?
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி!.