மாமூல் தர மறுத்த இறைச்சிக் கடைக்காரர் மீது தாக்குதல்.: வேலூரில் பட்டப்பகலில் மர்மகும்பல் வெறியாட்டம்

வேலூர்: வேலூரில் மாமூல் தர மறுத்த இறைச்சி கடை உரிமையாளரை ரவுடி கும்பல் சரமாரியாக வெட்டும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்துவச்சேரியில் கோழிக்கறி கடை நடத்தி வரும் சாதிக் பாஷா என்பவர் தாக்கப்பட்டவர் ஆவர். பட்டப்பகலில் மூன்று பேர் கொண்ட மர்மகும்பல் அவரிடம் மாமூல் கேட்டுள்ளனர். அப்போது சாதிக் பாஷா தர மறுத்ததால் அந்த மர்மகும்பல் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இந்த தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் மிதந்த சாதிக் பாஷா உடனடியாக வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நலம் குறித்து இன்றும் தகவல்கள் வெளியாகவில்லை. பட்டப்பகலில் ரவுடி கும்பல் ஆடிய வெறியாட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இறைச்சி கடை உரிமையாளர் சாதிக் பாஷா மீது நடத்தப்பட்ட இந்த வெறிச்செயலுக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>