×

விசாகப்பட்டினத்தில் 24-வது மலபார் கடற்படை பயிற்சி : இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகள் பங்கேற்பு!!

விசாகப்பட்டினம் : விசாகப்பட்டினத்தில் 24-வது மலபார் கடற்படை பயிற்சி தொடங்கியது. இந்த கூட்டுப்பயிற்சியில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகள் பங்கேற்றுள்ளனர். 24-வது மலபார் கடற்படை பயிற்சி 2020 நவம்பர் மாதத்தில் இரண்டு பகுதிகளாக நடைபெறும்.இந்திய, அமெரிக்க, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய கடற்படைகளுக்கான இந்த கூட்டுப் பயிற்சியின் முதல் பகுதி நாளை (நவம்பர் 3) முதல் நவம்பர் 6 வரை விசாகப்பட்டினத்துக்கு அருகே வங்காள விரிகுடாவில் நடைபெறும்.

1992ம் ஆண்டு இந்திய மற்றும் அமெரிக்க கடற்படைகளுக்கு இடையே இரு தரப்பு பயிற்சி நடவடிக்கையாக மலபார் தொடங்கியது. 2015-ஆம் ஆண்டு ஜப்பான் கடற்படை இதில் இணைந்தது. இந்த வருடம் முதல் ஆஸ்திரேலிய கடற்படையும் இதில் தன்னை இணைத்துக் கொண்டு இருக்கிறது.கோவிட்-19 பெருந்தொற்றை கருத்தில் கொண்டு நேரடி தொடர்பில்லாத கடலில் மட்டுமே நடைபெறும் பயிற்சியாக இந்த முறை மலபார் திட்டமிடப்பட்டிருக்கிறது.இந்திய, அமெரிக்க, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய கடற்படைகளின் நவீன கப்பல்கள், விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்கின்றன.
இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் மலபார் பயிற்சியின் இரண்டாம் பகுதி அரேபியக் கடலில் நடைபெறும்.

Tags : Malabar Naval Exercise ,India ,Visakhapatnam ,USA ,Australia ,Japan , Visakhapatnam, Malabar Navy, Training, India, USA, Japan, Australia
× RELATED விசாகப்பட்டினம் துறைமுகத்தில்...