×

காபுலில் 22 மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரம்.. கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறேன் என பிரதமர் மோடி தாக்கு!!


புதுடெல்லி: காபுல் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரில் உள்ள காபுல் பல்கலைக்கழகத்தில் நேற்று புத்தக கண்காட்சி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியில் ஆப்கானிஸ்தானுக்கான ஈரான் தூதர் பங்கேற்பதாக இருந்தது. இதனால், நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்தனர்.

அப்போது பல்கலைக்கழகத்திற்கு துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் வந்த பயங்கரவாதிகள், பல்கலைக்கழக வாயிலில் வெடிகுண்டு வீசினர். பின்னர் அங்கிருந்த மாணவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலை சற்றும் எதிர்பாராத மாணவர்கள் பதறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். பயங்கரவாதிகள் நடத்திய இந்த கொடூர தாக்குதலில் 22 மாணவ, மாணவிகள் உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஒரு மாணவியை பயங்கரவாதி ஒருவன் பணையக்கைதியாக பிடித்துக் கொண்டான். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மற்றும் ராணுவத்தினர் நீண்ட நேர சண்டைக்கு பிறகு 3 பயங்கரவாதிகளை சுட்டுக் கொண்டனர். அந்த மாணவியையும் மீட்டுள்ளனர்.

இந்நிலையில், காபுல் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக பிரதமர்மோடி வெளியிட்டுள்ள செய்தியில், காபூல் பல்கலைக்கழகத்தில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறேன். தாக்குதலில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன். பயங்கரவாததை எதிர்த்து துணிவுடன் போராடும் ஆப்கானிஸ்தானுக்கு தேவையான ஒத்துழைப்பை அளிப்போம் என தெரிவித்துள்ளார்.

Tags : Kabul , Kabul, students, Prime Minister Modi, attack
× RELATED பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழை...