×

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழை பெய்யும்

சென்னை: இலங்கை மற்றும் கிழக்கு அந்தமான் வங்கக் கடலில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் வழக்கமான வெப்ப சலனம் காரணமாக வளிமண்டல மேலடுக்கில் உருவாகியுள்ள சுழற்சியால் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நேற்று கோத்தகிரியில் 80 மிமீ மழை பெய்துள்ளது. திருமூர்த்தி அணை 70 மிமீ, அமராவதி அணை, குன்னூர், உடுமலைப் பேட்டை, 50 மிமீ, ஒட்டன்சத்திரம் 40மிமீ, பெரியகுளம், வால்பாறை30 மிமீ மழை பெய்துள்ளது.

இந்நிலையில், தமிழகக் கடலோரம் மற்றும் அதை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல், இலங்கை மற்றும் கிழக்கு அந்தமான் பகுதியில் நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி  மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் ஓரளவுக்கு மேககூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும்.


Tags : districts ,Tamil Nadu , It will rain in 9 districts of Tamil Nadu
× RELATED கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை