பாஜ தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசனுக்கு வரவேற்பு

சென்னை: தமிழக பாஜ துணை தலைவர் வானதி சீனிவாசனுக்கு, கடந்த புதன்கிழமை பாஜ தேசிய மகளிர் அணி தலைவராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் முறைபடி டெல்லியில் பதவியேற்று கொண்டார். பதவி வழங்கப்பட்ட பின்னர் முதன்முறையாக நேற்று மாலை அவர் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு தமிழக பாஜக மற்றும் மகளிர் அணி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அவருக்கு தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், மாலை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் கமலாலயத்தில் உள்ள பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Related Stories:

>