தினமும் 2,500க்கு மேல் இருந்த நிலையில் கொரோனா பாதிப்பு: 2,481 ஆக குறைவு: சுகாதார துறை அறிவிப்பு

சென்னை: தமிழக கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை :  தமிழகத்தில் நேற்று  70,297 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 2,481  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 671 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைச் சேர்த்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 29 ஆயிரத்து 507 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 3,940 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 6 லட்சத்து 98 ஆயிரத்து 820 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 27 ஆயிரத்து 273 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 31  பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதைச் சேர்த்து மொத்த மரணங்களின் எண்ணிக்கை 11,183 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>