×

பீகாரில் இரண்டாம் கட்ட தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

பாட்னா: பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகின்றது. 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. பீகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 243 தொகுதிகளிலும் மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகின்றது. முதல் கட்டமாக 71 தொகுதிகளில்  கடந்த 28ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 54 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் 2வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகின்றது. 17 மாவட்டங்களில் உள்ள 94 சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மொத்தம்1463 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் சுமார் 10 சோதவீதம் பேர் அதாவது 146 பேர் பெண்கள். மொத்தம் 2.85 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1.35 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர். இரண்டாவது கட்ட தேர்தலுக்காக மொத்தம் 41,362 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் வாக்குப்பதிவு மையங்களில் செய்யப்பட்டுள்ளது.

11 மாநிலத்தில் இடைத்தேர்தல்
பீகார் 2ம் கட்ட தேர்தலுடன், 11 மாநிலங்களில் 54 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தலும் நடக்க உள்ளது. மபியில் 28 தொகுதிக்கும், குஜராத்தில் 8, உபியில் 7, ஒடிசா, நாகலாந்து, கர்நாடகா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் தலா 2, சட்டீஸ்கர், தெலங்கானா மற்றும் அரியானாவில் தலா 1 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன. மணிப்பூரில் உள்ள 2 தொகுதிகளுக்கு வரும் 7ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

Tags : Bihar ,constituencies , Second phase polls in Bihar: Voting in 94 constituencies today
× RELATED பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!