அரசியலில் இருந்து விலகுவேனே தவிர பாஜவுடன் கூட்டணி சேரவே மாட்டேன்: மாயாவதி திட்டவட்டம்

லக்னோ: அரசியலில் இருந்து விலகுவேனே தவிர எக்காரணம் கொண்டும் பாஜவுடன் கூட்டணி சேர மாட்டேன் என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி திட்டவட்டமாக கூறி உள்ளார். ‘உத்தரப்பிரதேசத்தில் நடக்க உள்ள சட்டமேலவை தேர்தலில், சமாஜ்வாடி கட்சியைத் தோற்கடிப்பதற்காக பாஜ உள்ளிட்ட எந்த கட்சியையும் ஆதரிக்கத் தயார்’ என்று பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கடந்த வாரம் கூறினார். இதனால் பாஜவுடன் பகுஜன் சமாஜ் கூட்டணி வைக்க இருப்பதாக யூகங்கள் கிளம்பின. லக்னோவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மாயாவதி விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

சமாஜ்வாடியை எந்த அளவுக்கு எதிர்க்கிறோம் என்பதற்கான உதாரணமாகவே அப்படி கூறினேன். சமாஜ்வாடி, காங்கிரஸ் கட்சியினர் அரசியல் லாபங்களுக்காக என் பேச்சைத்  திரித்துவிட்டனர். சித்தாந்த ரீதியாக பாஜவுடன் நாங்கள் முற்றிலும் வேறுபடுகிறோம். அதனால், ஒருபோதும் எந்தத் தேர்தலிலும் பாஜவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒருவேளை பிரிவினைவாத சக்திகளுடன் கூட்டணி சேர வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதற்கு அரசியலிலிருந்தே ஓய்வு பெற்றுவிடுவேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories:

>