×

ஷேன் வாட்சன் ஓய்வு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், ஆஸ்திரேலிய அணி முன்னாள் நட்சத்திரமுமான ஷேன் வாட்சன் (39), அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்காகவும் இவர் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் அணி 2008ல் முதல் ஐபிஎல் சாம்பியனாக முத்திரை பதித்ததில் வாட்சனின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. நடப்பு சீசனில் சென்னை அணிக்காக பெரிதாக சாதிக்க முடியாவிட்டாலும், கிங்ஸ் லெவனுக்கு எதிராக 83 ரன் விளாசியது சென்னை ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தது. ஆஸி. அணிக்காக 59 டெஸ்ட், 190 ஒருநாள் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடிய வாட்சன், ஐபிஎல் தொடரில் 145 போட்டிகளில் களமிறங்கி உள்ளார்.


Tags : Shane Watson , Shane Watson retires
× RELATED கிரிக்கெட்டில் தமிழகம் நன்றாக...