×

பொய் வழக்குப்பதிவு செய்த சப் இன்ஸ்பெக்டர்களுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம்

சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியை சேர்ந்தவர் ஜெயா. இவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2014ம் ஆண்டு நடந்த ஒரு பிரச்னையில் தம்பதி என்னை தாக்கியது தொடர்பாக அஞ்சுகிராம காவல் நிலையத்தில் நான் கொடுத்த புகாரின் பேரில், அந்த தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் எஸ்ஐ அனிதா, குற்றம்சாட்டப்பட்ட தம்பதிக்கு ஆதரவாக செயல்பட்டு, எனது கணவரை காவல் நிலையம் அழைத்து சென்று தாக்கினார். சிறப்பு எஸ்ஐக்கள் கென்னடி, டேவிட் ஜெயசேகரன் ஆகியோர் எங்களிடம் இருந்த பணம், வங்கி கணக்கு புத்தகம், பைக் சாவி ஆகியவற்றை பறித்துக் கொண்டனர்.

நாங்கள் கொடுத்த புகாரை வாபஸ் பெறும்படி மிரட்டினர். எனது கணவரை தாக்கி பொய் வழக்கில் கைது செய்தனர். எனவே, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும் போது எஸ்ஐக்கள் 3 பேரும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தெரிகிறது. எனவே, மனுதாரருக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.60 ஆயிரம் வழங்க வேண்டும். இதை எஸ்ஐக்கள் 3 பேரிடம் இருந்து வசூலித்துக்கொள்ளலாம். அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags : Sub-inspectors , Sub-inspectors fined Rs 60,000 for making false allegations
× RELATED சப். இன்ஸ்பெக்டர் தேர்வில் 4 காவலர்கள் தேர்ச்சி