×

ராஜஸ்தானில் 3 மசோதா நிறைவேற்றம்

ஜெய்ப்பூர்: வேளாண் பொருள்களை சந்தைப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும்படி நாட்டின் முதல் மாநிலமாக பஞ்சாப் காங்கிரஸ் அரசு சட்டப்பேரவையில் 4 மசோதாக்களை சமீபத்தில் நிறைவேற்றியது. இதைத் தொடர்ந்து, ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு சார்பில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக 3 மசோதாக்கள் இரு தினங்களுக்கு முன் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்கள் மீது விவாதம் நடத்தி குரல் வாக்கெடுப்பு மூலம் நேற்று நிறைவேற்றப்பட்டது.

Tags : Rajasthan , 3 bills passed in Rajasthan
× RELATED ராஜஸ்தானுக்கு 5வது வெற்றி: பஞ்சாப் கிங்ஸ் ஏமாற்றம்