செல்போனில் கேம் விளையாடியதை தந்தை கண்டித்ததால் மாணவி தற்கொலை

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே புத்தகளூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கண்ணன். இவரது மகள் ஹேமா (17). பிளஸ் டூ முடித்துவிட்டு வீட்டிலிருந்து வந்தார். இவர், செல்போனில் இரவு-பகல் என்று பாராமல் கேம்களை விளையாடி வந்துள்ளார். இதனால் கண்ணன், ஹேமாவின் செல்போனை பிடுங்கிக் கொண்டார். மனமுடைந்த ஹேமா கடந்த 31ம் தேதி இரவு வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். 

Related Stories:

>