×

வீடியோவை படம்பிடித்த யூடியூபரால் ஏமாந்துவிட்டோம்...!! 'பாபா கா தாபா'முதியவர் கந்தா பிரசாத் மோசடி புகார்

டெல்லி: டெல்லி மால்வியாநகர் பகுதியில் அனுமன் கோயில் அருகே பாபா கா தாபா என்ற சிறிய உணவகம் நடத்தி வந்த 80 வயது முதியவர் கந்தா பிரசாத் கொரோனா காரணமாக கடைக்கு யாரும் வரமால் வருவாய் இன்றி பாதிக்கப்பட்டார். 1990ம் ஆண்டில் இருந்து சிறிய உணவகத்தை நடத்தி வரும் அவர், கொரோனா ஊரடங்கு காரணமாக நாள்தோறும் வருவாயின்றி கடை நடத்தி வந்துள்ளார். இதனை அறிந்த யூடியூபர் கெளரவ் வாசன் கடந்த 6ம் தேதி யூடியூபில் முதியவர் மற்றும் அவரின் மனைவி படும் துயரத்தை பதிவிட்டு வீடியோ வெளியிட்டிருந்தார். வீடியோவில் பேசிய கந்தா பிரசாத் ஒரு நாளைக்கு 60 ரூபாய் மட்டுமே வருவாய் கிடைப்பதாக கண்ணீர் சிந்தினார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கந்தா பிரசாத் கடைக்கு கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் தற்போது பாபா கா தபாவின் உரிமையாளர் காந்தா பிரசாத், அந்த வீடியோவை படம்பிடித்த யூடியூபரால் ஏமார்ந்ததாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். ஓட்டல் உரிமையாளரான காந்தா பிரசாத் அளித்த புகாரின் பேரில் கவுரவ் வாசன் தங்கள் ஓட்டல் வீடியோக்களை சமூக ஊடகத்தில் பரப்பி, அதன் மூலம் நன்கொடை பெற்றுள்ளதாகவும், பின்னர் அந்த நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் காந்தா பிரசாத் கூறியுள்ளார். கவுரவ் வாசன் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வங்கி கணக்கு எண்களை நன்கொடைக்கு பகிர்ந்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.

மேலும் இந்த நன்கொடை குறித்து ‘பாபா கா தாபா’ வின் உரிமையாளர்களான காந்தா பிரசாத் மற்றும் அவரது மனைவிக்கு இது பற்றி ஒன்றும் தெரியாது என்று கூறப்படுகிறது. கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கினால் தனது சிறிய ஹோட்டல் மோசமாக பாதிக்கப்பட்டதை கண்ணீருடன் விவரித்த அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை காரணம் காட்டி கவுரவ் வாசன் என்பவர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரசாத் உட்பட பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kanda Prasad ,Baba Ka Thapa , We were betrayed by the YouTube person who shot the video ... !! 'Baba Ka Thapa' old man Kanda Prasad fraud complaint
× RELATED வைரலாக வீடியோ, கடையில் குவியும் கூட்டம் முதியவர் காந்தா பிரசாத் ஹாப்பி