×

நியூசிலாந்தில் அமைச்சராகும் முதல் இந்தியர் என்ற வரலாற்றை படைத்தார் பிரியங்கா ராதாகிருஷ்ணன்

ஜெனிவா: நியூஸிலாந்து நாட்டில் முதல் முறையாக, இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பிரியங்கா ராதாகிருஷ்ணன் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுநாள்வரை இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட யாரும் நியூஸிலாந்து அரசில் அமைச்சராக இருந்தது இல்லை. இதனிடையே நியூஸிலாந்தில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோகமான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அங்கு பிரதமராக ஜெசிந்தா ஆர்டெர்ன் மீண்டும் பதவி ஏற்றுள்ளார். முதல் கட்டமாக 5 அமைச்சர்களுடன் பிரதமர் ஜெசிந்தா தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளார். அதில் ஒரு அமைச்சர் இந்தியாவைப் பூர்வீமாகக்கொண்ட பிரியங்கா ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டார்.

41 வயதான அவர் சமூக மற்றும் தன்னார்வ துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார். சென்னையில் பிறந்து சிங்கப்பூரில் வளர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணனின் சொந்த ஊர் கொச்சியின் பராவூராகும். அங்கு அவரது தாத்தா மருத்துவ நிபுணராக இருந்தார். அவர் ஒரு கம்யூனிஸ்டு அபிமானி ஆவார். ஆக்லாந்தில் இருந்து இரண்டு முறை எம்.பி. பதவி வகித்த பிரியங்கா, தனது உயர் படிப்பைத் தொடர நியூசிலாந்துக்கு சென்றார். அங்கு இருக்கும்போது அவர் கிறிஸ்ட்சர்ச்சை சேர்ந்த ரிச்சர்ட்சன்னை திருமணம் செய்து கொண்டார். 2004 முதல் அவர் தொழிற்கட்சியுடன் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டார். கடந்த ஓணம் பண்டிகையின் போது, பிரியங்கா, நியுசிலாந்து பிரதமர் ஆர்டணுடன் நேரலையில் கேரள மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அதற்குப் பிறகு அவர் கேரளாவில் மிகவும் பிரபலமானார். மலையாள பாடல்களுடனான பிரியங்கா ராதாகிருஷ்ணனின் காதல் இன்னும் தொடர்கிறது. பிரபல கேரள பின்னணி பாடகர் கே.ஜே. யேசுதாஸ்தான் தனக்கு பிடித்த பாடகர் என்கிறார் நியுசிலாந்து அமைச்சர் பிரியங்கா ராதாகிருஷ்ணன். நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறுகையில், “அறிவார்ந்தவர்களையும், புதியவர்களையும் அமைச்சரவைக்குள் அழைத்து வருவதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். புதிய துறைகளில் பணிபுரியும் அமைச்சர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள். அதேசமயம், புதிதாக நியமிக்கப்படும் அமைச்சர்கள் சிறப்பாகச் செயல்படாவிட்டால் நிச்சயம் அதற்கேற்ற தண்டனையுடன் பதவியும் பறிக்கப்படும்” என கூறியுள்ளார்.


Tags : Priyanka Radhakrishnan ,Indian ,New Zealand ,minister , Priyanka Radhakrishnan made history as the first Indian to become a minister in New Zealand
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்