×

பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கயம் இன மாடுகள் ரூ.24 லட்சத்துக்கு விற்பனை

காங்கயம்: காங்கயம் அடுத்துள்ள நத்தக்காடையூர் அருகே பழையகோட்டை மாட்டுத்தாவணியில் நேற்று காங்கயம் இன மாடுகள் ரூ.24 லட்சத்திற்கு விற்பனையானது. காங்கயம் தாலுகா, நத்தக்காடையூர் பழையகோட்டையில் காங்கயம் இன மாடுகளுக்கான சந்தை வாரந்தோறும் நடைபெற்று வருகிறது. நேற்றை சந்தையின் போது கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் விற்பனைக்காக 108 மாடுகளை கொண்டு வந்தனர்.

இதில் காங்கயம் இன மாடுகள் ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.85 ஆயிரம் வரை விற்றது. பசுங்கன்றுகள் ரூ.10ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்பனையானது. காளைகன்றுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை விற்கப்பட்டது. நேற்று ஒரு ஜோடி காங்கயம் இன காளைக் கன்று ரூ.96 ஆயிரத்திற்கு விற்பனையானது. மொத்தம் 70 கால்நடைகள் ரூ.24 லட்சத்திற்கு விற்பனையானது.

Tags : Kangayam ,sale ,cattle market ,Palayakottai , Kangayam
× RELATED காங்கயம் அருகே தொன்று தொட்டு நடக்கும்...