×

கண்மாய் நீரை பங்கீடுவதில் இரண்டு கிராமங்களுக்கு இடையே பிரச்னை: மோதலை தடுக்க போலீஸ் பாதுகாப்பு

மானாமதுரை: மானாமதுரை அருகே குடஞ்சாடி ஊராட்சியில் உள்ள குடஞ்சாடி, உருளி, முத்தரசன், கோடங்கிபட்டி ஆகிய 4 கிராமங்களுக்கு பொதுவாக பாசன கண்மாய் உள்ளது. இந்த கண்மாயை பாசனத்துக்காக கிராமத்தினரும் பயன்படுத்தி வந்தனர். தற்போது கண்மாயில் தண்ணீர் ஓரளவிற்கு இருப்பதால் இப்பகுதி மக்கள் விவசாய செய்ய தொடங்கினர். விவசாய வேலைகளை கிராம மக்கள் செய்து வந்த நிலையில், கடந்த வாரம் உருளி கிராமத்திற்கு பாசனநீரை பங்கீடுவதில் இரண்டு கிராமத்தினரிடையே திடீரென பிரச்னை ஏற்பட்டது. இதனால் உருளி கிராமத்தினர் வயல்களுக்கு கண்மாய் நீரை பாசனம் செய்ய முடியாமல் திண்டாடினர்.

இரண்டு கிராமங்களுக்கு இடையே நேற்று காலை மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு உருளி கிராமத்திற்கும் குடஞ்சாடி கிராமத்துக்கும் இடையே மோதல் உருவாகி கைகலப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சிவகங்கை தாலுகா வருவாய்த்துறையினர், மானாமதுரை டிஎஸ்பி சுந்தரமாணிக்கம், இன்ஸ்பெக்டர் சேது உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அரசு நிர்வாகத்தினர் இரு கிராமத்தினரிடமும் பேச்சுவார்தை நடத்தினர். விவசாய சங்க மாநில நிர்வாகி ராமமுருகன் கூறுகையில், கண்மாய் பாசனம் தொடர்பாக வருவாய் துறையினர் எந்த சமரச முடிவும் எடுக்காமல் இருந்ததால் தான் மோதல் உருவானதாக தெரிகிறது. ஆகவே கலெக்டர் தலையிட்டு நல்ல தீர்வு காண வேண்டும் என்றார்.

Tags : villages ,conflict ,Kanmai , Manamadurai
× RELATED திருப்பத்தூரில் 14 கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு