×

நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முக்கிய மாகாணங்களில் ஜோ பைடனுக்கு சாதகமாக காற்று வீசுவதாக கருத்துக்கணிப்பில் தகவல்.!!!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குபதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில் கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்புகளும் டிரம்பிற்கு சாதகமாக அமையவில்லை. கடந்த முறை அதிபர் டிரம்ப் வென்ற மாகாணங்களில் ஜோ பைடன்  முன்னிலை வகிக்கிறார். இ-மெயில் மூலம் ஏற்கனவே பதிவான வாக்குகள் எண்ணுவதில் காலதாமதம் ஏற்படும் என்பதால் குழப்பம் வரவும் வாய்ப்புகள் உள்ளது. அமெரிக்காவில் கடந்த அதிபர் தேர்தலில் கிளாரி கிளின்டனை ரொனால்ட் டிரம்ப் வீழ்த்த காரணமாக  இருந்த அரிசோனா (Arizona),  புளோரிடா(Florida) , விஸ்கான்சின் (Wisconsin), மிச்சிகன் (Michigan), பென்சில்வேனியா ( pennsylvania), வட கரொலைனா  (N. Carolina) ஆகிய மாகாணங்களில் இம்முறை காற்று திசைமாறி வீசுகிறது. அடுத்த அதிபரை தீர்மானிக்கும் போர்களமாக வர்ணிக்கப்படும் இந்த 5 மாகாணங்களிலும் பிரச்சாரம்  தொடங்கிய முதலே டிரம்பை காட்டிலும் ஜோ பைடன் முன்னிலை வகிக்கிறார்.

இம் மாகாணங்களில் தேர்தல் நாள் நெருங்க நெருங்க ஜோ பைடனுக்கு தொடர்ந்து ஆதரவு அதிகரித்தே வருகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில், (விஸ்கான்சின்) Wisconsin மாகாணத்தில் ஜோ பைடன் வெற்றி பெறுவது உறுதி என்று  அனைத்து கருத்துக்கணிப்பிலும் கூறுகின்றன. பென்சில்வேனியா(pennsylvania),  அரிசோனா(Arizona),  புளோரிடா(Florida )ஆகிய மாகாணங்களிலும் ஜோ பைடன் முன்னிலை வகிக்கிறார். இதனை தவிர கடந்த முறை டிரம்ப் வெற்றி பெற்ற மிச்சிகன்(Michigan) மாகாணத்திலும் பைடன் முந்துகிறார்.

ஆனால், கருத்துக் கணிப்புகளை தொடர்ந்து புறம் தள்ளிவரும் அதிபர் டிரம்ப், இழுபறியாக இருக்கும் மாகாணங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். முதல்முறை வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் கருப்பினத்தவர், படித்த வெள்ளை  இனத்தவர், அமெரிக்க வாழ் ஆசிரியர்களிடம் பைடனுக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது. அதே நேரத்தில் கல்லூரி கால் பதிக்காத வெள்ளை இனத்தவர், கிராம புறங்களில, டிரம்பிற்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது. அமெரிக்காவில் தேர்தல்  தினம் நாளை தான் என்றாலும் பல மாகாணங்களில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. exos மாகாணத்தின் மிகப்பெரிய நகரான kosali மக்கள் 24 மணி நேரமும் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.  

முன்கூட்டியே வாக்களித்தவர்களில் பெரும்பாலானோர் பைடனை ஆதரிக்கும் ஜனநாயக கட்சியினர் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. டிரம்ப் சார்ந்த குடியரசு கட்சியினர் பெரும்பாலானோர் நாளைதான் வாக்களிப்பார்கள் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. நாளைய தினம் பதிவாகும் வாக்குகள் முதலில் எண்ணப்படும் என்பதால் தொடக்கத்தில் டிரம்ப் முன்னிலை வகிக்க வாய்ப்புகள் உள்ளது. பைடனுக்கு சாதகமான இ-மெயில் வாக்குகளும் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட  வாக்குகளும் எண்ணப்பட காலதாமதம் ஏற்படலாம். தேர்தலின் நம்ப தன்மை குறித்து தொடர்ந்து அதிபர் டிரம்ப் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.  



Tags : US ,election ,provinces ,Joe Biden , US presidential election tomorrow: Polls in favor of Joe Biden in key provinces.
× RELATED தேர்தல் நேரத்தில் ஒன்றிய அரசு...