சென்னை: உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்திற்கான துறை ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றிப் பெற்று தனிப் பெரும்பான்மை பலத்துடன் திமுக ஆட்சியை பிடித்திருக்கிறது. கட்சியிலும், ஆட்சியிலும் பல்வேறு பதவிகளை அலங்கரித்த மு.க.ஸ்டாலின் முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். முதலமைச்சராக பதவியேற்று முதன்முறையாக தலைமை செயலகத்திற்குச் சென்ற மு.க ஸ்டாலின் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். ஏற்கெனவே தேர்தல் பரப்புரையின்போது, மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் தீர்வுகாண ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்று வாக்களித்திருந்தார். அதன்படி, ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்திற்கான துறையை இன்று உருவாக்குவதற்கான கோப்புகளில் கையெழுத்தினார். அதனையடுத்து அந்த துறைக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஷில்பா பிரபாகர் சதீஷை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்து கோப்பில் கையெழுத்திட்டுள்ளார். இந்நிலையில் இந்த திட்டத்தில் மனுக்கள் மீது 100 நாட்களுக்கு தீர்வு காணப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags : Department for Chief ,Shilpa Prabhagar Sadesh ,S.S. ,Chennai ,Department for the Chief ,Minister ,I.S. PA ,Shilpa ,Prabhagar Sadesh ,S.S. Tamil Nadu Assembly Elections ,PA ,Shilpa Prabhagar Sadeesh ,US ,Dinakaran ,