×

கொரோனா தொற்று நபருடன் தொடர்பு : உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் தனிமைப்படுத்தி கொண்டார்

ஜெனீவா : கொரோனா தொற்றுள்ள நபருடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில் உலக சுகாதார  அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானாம் தனிமைப்படுத்தி கொண்டார்.சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 4.68 கோடி பேருக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 12 லட்சத்து 05 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று அதனை முறையாக அறிவித்த உலக சுகாதார= அமைப்பின் தலைவரையும் விட்டு வைக்கவில்லை. உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குனராக இருப்பவர் டெட்ரோஸ் அதானம்.  இவருடன் கொரோனா பாதித்த நபர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார்.  இதுபற்றி அறிந்த டெட்ரோஸ் அதானம் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.இதைத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார், அதில், தம்முடன் தொடர்பில் இருந்தவருக்கு கொரோனா பாசிட்டிவ் என தெரியவந்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் விதிகளின்படி நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.  நான் நலமுடன் உள்ளேன். எனக்கு எந்த கொரோனா அறிகுறியும் இல்லை. வீட்டில் இருந்தே பணிபுரிகிறேன் என கூறியுள்ளார்.

Tags : Tetros ,World Health Organization , Corona, Infection, World Health Organization, Director, Tetros
× RELATED இயர் பட்ஸ், ஹெட் போன்களின் அபரிவிதமான...