×

லவ் ஜிஹாத்துக்கு எதிராக கடும் சட்டம்... பெண்களுக்கு இடையூறு விளைவித்தால் இறுதி ஊர்வலம் : உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சு

லக்னோ, :உத்தரபிரதேசத்தில் லவ் ஜிகாத்துக்கு எதிராக கடுமையான சட்டம் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்  தெரிவித்துள்ளார்.உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அருகே ஜூவான்பூர் என்ற இடத்தில் இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், ‘மாநிலத்தில் இந்துப் பெண்களைப் பாதுகாக்கவும், லவ் ஜிகாத்துக்கு எதிராகவும் கடுமையான சட்டம் இயற்றப்படும். எங்கள் சகோதரிகளின் அடையாளத்தையும், பெருமையையும், மாண்பையும் குலைக்கும் வகையில் செயல்படுவோருக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். அவ்வாறு தொடர்ந்து எங்கள் சகோதரிகளுக்கும், பெண்களுக்கும் இடையூறு விளைவிப்போருக்கு இறுதி ஊர்வலம் நடத்த வேண்டியது இருக்கும்.

திருமணத்திற்கு மத மாற்றம் தேவையில்லை என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மதம்மாறி திருமணம் செய்த ஜோடி போலீஸ் பாதுகாப்புக் கோரி மனுத்தாக்கல் செய்தனர். திருமணமான பெண் பிறப்பால் முஸ்லிம், திருமணம் செய்வதற்கு ஒரு மாதத்துக்கு முன் இந்து மதத்துக்கு மாறியுள்ளார். திருமணம் செய்வதற்காக மதம் மாற முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து அந்த மனுவைத் தள்ளுபடி செய்ததை இங்கு கூறுகிறேன். மாநிலத்தில் லவ் ஜிகாத்தை தடுக்க விரைவில் கடுமையாக சட்டம் கொண்டுவரப்படும்’ என்று தெரிவித்தார்.

Tags : love jihad ,Yogi Adityanath ,women ,Uttar Pradesh , Love Jihad, Law, Women, Funeral, Uttar Pradesh, Chief Minister, Yogi Adityanath
× RELATED 4 வேட்பு மனுக்களை வாங்கிய வருண் காந்தி:...