×

தமிழகம்-புதுச்சேரி இடையே முதற்கட்டமாக 20 எஸ்இடிசி பஸ்கள் இயக்கம்: அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகம்-புதுச்சேரி இடையே முதற்கட்டமாக 20க்கும் மேற்பட்ட எஸ்இடிசி பஸ்கள் இயக்கப்படுகிறது. பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பஸ்களின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது என்று போக்குவரத்து துறை அதிகாரி தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பொதுபோக்குவரத்து தடை செய்யப்பட்டது. ஊரடங்கு தளர்வில் மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் மாநிலங்களுக்கு இடையே பஸ்கள் செல்ல அனுமதியில்லை.

புதுச்சேரி மாநிலம் தமிழகத்திற்கு மிக அருகில் உள்ளதால் இரண்டு மாநிலங்களுக்கும் இடையே பஸ்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. மேலும் அம்மாநில முதல்வரும், தமிழக அரசுக்கு இதுதொடர்பாக வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து தமிழக அரசு நேற்று முன்தினம் தமிழகம் மற்றும் புதுச்சேரி இடையே பஸ் போக்குவரத்துக்கு இனி ஆன்லைனில் பதிவு செய்ய தேவையில்லை என்ற உத்தரவை பிறப்பித்தது. இதன்காரணமாக 7 மாதங்களுக்கு பிறகு இருமாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து துவங்கியது. ஆனால் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் குறைவான பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், பஸ்களின் எண்ணிக்கை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சென்னையிலிருந்து அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் சார்பில் புதுச்சேரிக்கு 40க்கும் மேற்பட்ட பஸ்கள் தினசரி இயக்கப்படும். தற்போது பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் 20க்கும் மேற்பட்ட பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதேபோல் விழுப்புரம் கோட்டத்தின் சார்பில் இயக்கப்படும் அரசு பஸ்களும் குறைவாக இயக்கப்பட்டது. பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், இயக்கப்படும் பஸ்களில் எண்ணிக்கையையும் உயர்த்தப்படும்’ என்றார். சென்னையிலிருந்து அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் சார்பில் புதுச்சேரிக்கு 40க்கும் மேற்பட்ட பஸ்கள் தினசரி இயக்கப்படும்.


Tags : SEDC ,Pondicherry ,Tamil Nadu ,phase , Operation of 20 SEDC buses between Tamil Nadu and Pondicherry in the first phase: Officials informed
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...