செய்யூர், மதுராந்தகத்தில் இணையதளம் வாயிலாக திமுக உறுப்பினர் சேர்க்கை

செய்யூர்: செய்யூர், மதுராந்தகத்தில் நடந்த ஆன்லைன் மூலம் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. செய்யூர் தாலுகாவுக்குட்பட்ட விளாங்காடு, அகரம், சூனாம்பேடு ஊராட்சிகளில் திமுக சார்பில் ஆன்லைன் மூலம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நேற்று முன்தினம் நடந்தது. காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, ஆர்.டி.அரசு எம்எல்ஏ ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர். பேராசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார். சித்தாமூர் முன்னாள் ஒன்றிய செயலாளர் விஜயன் முன்னிலை வகித்தார். பின்னர், இணையவழி மூலமாக சேர்ந்த 500க்கும் மேற்பட்டோருக்கு புதிய உறுப்பினர் அட்டைகளை எம்எல்ஏக்கள் க.சுந்தர், புகழேந்தி வழங்கினர்.

இதில் பாமக, தேமுதிக உள்பட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 56 பேர், க.சுந்தர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். சித்தாமூர் ஒன்றிய செயலாளர் ஏழுமலை, முன்னாள் ஒன்றிய செயலாளர் தனசேகரன், நிர்மல்குமார், பொதுக்குழு உறுப்பினர் ராமலிங்கம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் குணா, நிர்வாகிகள் சிற்றரசு, மூர்த்தி, தொழில்நுட்ப அணி வசந்தராஜ், கிளை செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், மதுராந்தகத்தில் நடந்த ஆன்லைன் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமில் ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், பட்டதாரிகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் க.சுந்தர் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதில் காஞ்சிபுரம் எம்பி செல்வம், எம்எல்ஏக்கள் புகழேந்தி, ஆர்.டி.அரசு, நகர செயலாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: