திருமண மண்டபத்தில் மொய் பணம் திருட்டு:ஆசாமி கைது

கும்மிடிப்பூண்டி: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய்பணத்தை திருடிய ஆசாமியை போலீசார் கைது செய்தனர். ஊத்துக்கோட்டை மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த நவீன்(26) மற்றும் ஆந்திர மாநிலம் தடா பகுதியை சேர்ந்த பிந்து(21) ஆகிய இருவருக்கும் கடந்த புதன்கிழமை கவரப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேடை அருகில் மணமகன் நவீனின் உறவினர் மற்றும் நண்பர்கள் அவரிடம் அன்பளிப்பு மற்றும் மொய் பணத்தை கொடுத்தனர். அப்போது, மேடையில் இருந்த மர்ம நபர் மணமகன் நவீன் வைத்திருந்த பையில் ரூ.42 ஆயிரம் மொய் பணத்தை திருடிவிட்டு மாயமானார்.

புகாரின்பேரில் கவரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மண்டபத்தில் எடுத்த வீடியோ காட்சிகள் மற்றும் மண்டபம் அருகாமை கடைகளில் இருந்த இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது, தேர்வாய் காலனி பகுதியை சேர்ந்த ஈசன்(எ)வெங்கடேசன் மொய் பணத்தை திருடியது தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் வெங்கடேசன் வேலைக்கு ஏதும் போகாமல் சுற்றி திரிந்தபோது திருமணத்தில் சாப்பிட்டு விட்டு செல்லலாம் என வந்து, அங்கு மணமகன் நவீன் அருகே யாரும் இல்லாத நேரத்தில் மொய் பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.

Related Stories:

>