மின்சாரம் பாய்ந்து மாடு பலி

ஆவடி: ஆவடி மாநகராட்சி 18வது வார்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக, ஒப்பந்ததாரர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலைகளை கிளறி வருகின்றனர். இந்த பணியின்போது பூமிக்கு அடியில் வீடுகளுக்கு செல்லும் மின்வடம் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து, ஒப்பந்ததாரர்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் அவ்வழியே சென்ற பசுமாடு ஒன்று மின்சாரம் பாய்ந்து துடிதுடித்துக் கொண்டிருந்தது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் பசு மாட்டை காப்பாற்றினர். அப்போது, சிலர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனர். இதில், அவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆனால் அந்த பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது. தகவலறிந்த ஆவடி மாநகராட்சி மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சேதமடைந்த மின் வடத்தை சீரமைத்தனர்.

Related Stories:

>