கொடைக்கானல் அழகை ரசிக்க ஹெலிகாப்டர் சுற்றுலா அறிமுகம்

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகரில் உள்ள சுற்றுலா இடங்களை, இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப்பார்க்க தனியார் ஹெலிகாப்டர் சேவை நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதியுடன் கோவையை சேர்ந்த தனியார் நிறுவனம் நாளை வரை கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் இருந்து ஹெலிகாப்டரை இயக்குகிறது. சுமார் 15 நிமிடங்கள் வானில் சுற்றி, இயற்கை அழகை ரசிக்க ஒரு நபருக்கு ரூ.6 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Related Stories:

>