×

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது சரமாரியாக கற்களை வீசி விரட்டிய இலங்கை கடற்படை: தொடரும் அட்டகாசத்தால் தவிப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு சென்றனர். தனுஷ்கோடி - தலைமன்னாருக்கு இடைப்பட்ட கடல் பகுதியில் மீன்பிடித்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகை துரத்திச் சென்று கற்களை சரமாரியாக வீசி தாக்கினர். 2 மணி நேரத்திற்கும் மேலாக இலங்கை கடற்படையினர் கல்லெறிந்து தாக்குதல் நடத்தி, மீனவர்களை விரட்டியடித்தனர். மீனவர்கள் கூறுகையில், ‘‘பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க செல்லும் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கல்லெறிந்து தாக்குதல் நடத்துவது, மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசி விரட்டியடிப்பது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். தமிழக மீனவர்களை வழிமறித்து விரட்டுவதற்காகவே, கடல் எல்லைப்பகுதியில் இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பல்களை நிறுத்தி இரவு பகலாக கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். இவர்களின் அத்துமீறலை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Sri Lankan Navy ,fishermen ,Rameswaram ,Suffering , Sri Lankan navy throws stones at Rameswaram fishermen: Suffering continues
× RELATED இலங்கை கடற்படையை கண்டித்து...