ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் மெட்ரோ ரயிலில் 10.63 லட்சம் பேர் பயணம்

சென்னை: ஊரடங்கு தளர்வுக்கு பின் துவக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவையில் இதுவரை 10.63 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது பற்றி மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவித்ததை அடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. அதன் படி விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை நீல வழிதடத்தில் செப்டம்பர் மாதம் 7ம் தேதியும், பரங்கிமலை (கோயம்பேடு வழியாக) - சென்ட்ரல் பச்சை வழித்தடத்தில் செப்டம்பர் 9ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை துவக்கப்பட்டது.

துவக்கப்பட்ட நாளிலிருந்து செப்டம்பர் மாதம் முழுவதும் 3,60,193 பேரும், கடந்த அக்டோபர் மாதம் 7,03,223 பேரும் என இதுவரை மொத்தம் 10,63,416 பேர் பயணம் செய்துள்ளனர். மேலும் அக்டோபர் மாதத்தில் புதிதாக தொடங்கப்பட்ட கியுஆர் கோடு பயணச்சீட்டு முறையில் 19,607 பேரும், பயண அட்டை பயண சீட்டு முறையில் 4,34,289 பேரும் பயணம் செய்துள்ளனர். கியுஆர் கோடு பயணச்சீட்டில் ஒரு வழிப்பயண அட்டை, இருவழி பயண அட்டை மற்றும் பலவழி பயண அட்டை ஆகியவற்றில் கடந்த செப்டம்பர் மாதம் 11ம் தேதி 20% கட்டண தள்ளுபடி அளிக்கப்பட்டது. மேலும் பயண அட்டைகளை பயன்படுத்துவோருக்கு 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>