×

காஷ்மீரில் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல் தலைவன் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில்  ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவன் சுட்டுக் கொல்லப்பட்டான். ஜம்மு காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்  நடத்தி வருகி்றது. அதுபோல்,கதுவா, பூஞ்ச் மாவட்ட எல்லை பகுதிகளில் நேற்று முன்தினம் இரவும் அது தாக்குதல் நடத்தியது. கதுவா மாவட்ட எல்லையில்  நடத்தப்பட்ட தாக்குதலில் மன்யாரி, சந்த்வா மற்றும் லோன்தி கிராமங்களில் உள்ள வீடுகள் சேதமடைந்தன. அங்கிருந்த சிவன் கோயிலும் சேதமடைந்தது. நேற்று காலை வரை தொடர்ந்த இந்த தாக்குதலில், சிறிய ரக குண்டுகள், ராக்கெட்டுகள் போன்றவற்றை பாகிஸ் தான் ராணுவம் பயன்படு த்தியது.இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது.

இந்நிலையில் காஷ்மீரில் ரான்கிரத் என்ற இடத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை சுற்றி வளைத்து, ராணுவம் நேற்று தாக்குதல் நடத் தியது. அப்போது, அவர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.
அதில், தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டான் அவன் பெயர் சயிப்புல்லா எனவும், ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவன்எனவும் தெரிய வந்தது. காஷ்மீரில் நடந்துள்ள பல்வேறு தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் இவன் தேடப்பட்டு வந் தான். பயங்கரமான இவன் கொல்லப் பட்டது பாதுகாப்பு படைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

Tags : Hizbul ,army ,Kashmir , Hizbul leader shot dead by army in Kashmir
× RELATED ஈரான் அனுப்பிய 300 டிரோன்களை வழிமறித்து...