×

துருக்கி பூகம்ப பலி 57 ஆக உயர்வு இரவு பகலாக மீட்பு பணி: 70 வயது முதியவர் உயிருடன் மீட்பு

இஸ்மிர்: துருக்கி பூகம்பத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. துருக்கியின் 3வது பெரிய நகரமான இஸ்மிரில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகலில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 6.9 புள்ளிகளாக பதிவானது. இந்த பூகம்பத்தால் கட்டிடங்கள் தரைமட்டமாகின. இஸ்மிரில் இடிந்த கட்டிடங்களில் இன்னும் ஏராளமான மக்கள் சிக்கியுள்ளனர். அங்கு நேற்றும் 3வது நாளாக மீட்புப்பணிகள் நடந்தது. இரவு பகலாக இடைவிடாமல் இப்பணி நடக்கிறது. இதில், தொடர்ந்து சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் இரவு வரையில் 26 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் 20 சடலங்கள் மீட்கப்பட்டன. இதன் மூலம், பூகம்பத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. 900 பேருக்கும் மேல் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும், மீட்கும்பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். நேற்று நடந்த மீட்புபணியின்போது, 70 வயது முதியவர் ஒருவர் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டார். இது குறித்து  துருக்கியின் சுகாதாரத்துறை அமைச்சர் பக்ரெட்டின் கோகா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘தொடர் முயற்சிகள் காரணமாக 70 வயது முதியவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். உறவினர்களைக் காணாமல் பரிதவித்துப் போயிருக்கும் பலருக்கு இந்த சம்பவம் நம்பிக்கையை அளித்துள்ளது. நம்பிக்கையை நாங்கள் ஒருபோதும் இழக்க மாட்டோம்,’ என்று கூறியுள்ளார்.


Tags : Turkey ,rescue mission , Turkey quake death toll rises to 57 Day and night rescue mission: 70-year-old rescued alive
× RELATED துருக்கியில் கேளிக்கை விடுதியில்...