உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் 4 ஆட்டம்: பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற 6 அணிகள் கடும் போட்டி

ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் 4 லீக் போட்டிகளே உள்ளன. தற்போது மும்பை மட்டுமே பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. மற்ற 3 இடத்திற்கு பெங்களூரு, டெல்லி, ஐதராபாத், பஞ்சாப், ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் போட்டியில் உள்ளன. இன்று சென்னைக்கு எதிராக பஞ்சாப் வெற்றி பெற்றாலும் பிற போட்டியின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். இரவு 7.30 மணிக்கு ராஜஸ்தான்-கொல்கத்தா மோதும் போட்டியில் யார் தோற்றாலும் நடையை கட்டவேண்டியது தான். வெற்றிபெறும் அணிக்கு வாய்ப்பு சிறிதளவு உள்ளது.

டெல்லி நாளை பெங்களூருடன் மோதுகிறது. இதில் வெற்றிபெறும் அணி 2வது டீமாக பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யும். தோற்கும் அணி கடைசி ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்கவேண்டும். கடைசி போட்டியில் நாளை மறுநாள் மும்பையுடன் ஐதராபாத் மோதுகிறது. வாழ்வா-சாவா போட்டியில் ஐதராபாத் வெற்றி பெற்றால் 14 புள்ளிகளுடன் எளிதாக பிளே ஆப் வாய்ப்பை பெறும். ஏனெனில் நல்ல ரன்ரேட்டை வைத்துள்ளது. அப்படி நடக்கும் பட்சத்தில் பஞ்சாப், ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் வெளியேற்றப்படலாம். ஒருவேளை ஐதராபாத் தோற்றால் இந்த 3 அணிகளில் ஒன்றுக்கு வாய்ப்பு கிடைக்கும். எப்படியும் 14 புள்ளிகளை பெறும் 2 அணிகள் பிளேஆப் வாய்ப்பை பெறும். இதற்கு முன் 2010ல் இதேபோல் 7 வெற்றிகளை பெற்ற 2 அணிகள் பிளேஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளன. இதனால் அடுத்த 4 ஆட்டங்கள் உச்சக்கட்ட பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>