×

கட்டாய வெற்றி நெருக்கடியில் பஞ்சாப் வெற்றியுடன் முடிக்குமா சென்னை?: இரவு 7.30க்கு கேகேஆர்-ராஜஸ்தான் மோதல்

துபாய்: ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று 2 போட்டிகள் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு அபுதாபியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. 13 போட்டிகளில் 5 வெற்றி,, 8 தோல்விகளுடன் பிளேஆப் வாய்ப்பை இழந்துவிட்ட சென்னை, வெற்றியுடன் தொடங்கிய தொடரை வெற்றியுடன் முடிக்கும் முனைப்பில் உள்ளது.
மறுபுறம் பஞ்சாப் 13 போட்டியில் 6ல் வெற்றி பெற்றுள்ளது. இன்று வெற்றிபெற்றால் மட்டுமே பிளே  ஆப் வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியான நிலையில் களம் காண்கிறது. இரு அணிகளும், 22 முறை மோதியதில், சென்னை 13, பஞ்சாப் 8 ல் வென்றுள்ளன.

நடப்பு சீசனில் அக்.4ம்தேதி மோதிய போட்டியில் சென்னை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.இரவு 7.30 மணிக்கு துபாயில் கொல்கத்தா-ராஜஸ்தான் மோதுகின்றன. இரு அணிகளும் 13 போட்டிகளில் தலா 6ல் வென்றுள்ளன. இன்று வெற்றிபெறும் அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு  சிறிதளவு உள்ளது. தோற்கும் அணி வெளியேறும். இரு அணிகளும் 21 முறை மோதியதில், கொல்கத்தா 11ல், ராஜஸ்தான் 10ல் வென்றுள்ளன. நடப்பு சீசனில் செப். 30ம்தேதி மோதிய போட்டியில் கொல்கத்தா 37 ரன் வித்தியாசத்தில் வென்றது.

Tags : Chennai ,victory ,victory crisis ,Punjab ,clash ,KKR ,Rajasthan , Chennai to end Punjab victory in forced crisis ?: KKR-Rajasthan clash at 7.30 pm
× RELATED சுடர் வடிவேல் சுந்தரி