×

புதர் மண்டி கிடக்கும் சாத்தனூர் கல்மர பூங்கா அருங்காட்சியக வளாகம் சீரமைக்கப்படுமா?: மக்கள் எதிர்பார்ப்பு

பாடாலூர்: ஆலத்தூர் தாலுகா சாத்தனூர் கல்மர பூங்கா அருகில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியக வளாகம் புதர்மண்டி கிடப்பதால் அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆலத்தூர் தாலுகா சாத்தனூரில் மிகவும் பழமை வாய்ந்த கல் மரப் பூங்கா உள்ளது. இந்த கல் மரப் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் சென்று கண்டுகளித்து வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்கி ஓய்வெடுக்கும் வகையில் பயணியர்விடுதி அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன்பெயரில் சாத்தனூர் கல்மர பூங்காவின் அருகில் பயணியர் விடுதி அமைக்கப்பட்டது. அந்த வளாகத்திலேயே பழமையான பொருட்கள் காட்சி படுத்துவதற்காக அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது.

மேலும் அதே வளாகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் அம்மா திட்டத்தின் கீழ் ரூ. 20 லட்சம் மதிப்பில் அம்மா பூங்கா அமைக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் பயணியர் விடுதி, அருங்காட்சியகம் ஆகியவை திறக்க படாமலேயே பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்மா பூங்கா முழுவதும் புதர்மண்டி சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க முடியாத வகையில் உள்ளது. ரூ. 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணியர் விடுதி, ரூ. 10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகம், ரூ.20 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்ட அம்மா பூங்கா என அனைத்தும் மக்களின் பயன்பாட்டுக்கு வராமலேயே அழிந்து போகும் நிலையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சாத்தனூர் கல்மர பூங்காவை கண்டுகளிக்க வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காகவும் பழமையான பொருட்களை காட்சிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட அருங்காட்சியகமும் பயன்பாடற்ற நிலையில் இருப்பதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அரசு பணம் வீணாக செலவாகி என்ன நோக்கத்திற்காக செய்யப்பட்டது என்பதே தெரியாமல் உள்ளது என மிகவும் மனவேதனையுடன் செல்கின்றனர். எனவே சுற்றுலா பயணிகளின் வசதிக்காகவும், அவர்கள் கண்டுகளிக்கும் வகையிலும் பயணியர் மாளிகை, அருங்காட்சியகம் இருந்தும் பயனற்ற நிலையில் உள்ளது. எனவே, பயணியர் மாளிகை அருங்காட்சியகம் ஆகியவற்றை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புதர் மண்டிக்கிடக்கும் பூங்காவை சீரமைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : complex ,Sathanur Kalmara Museum ,Budar Mandi , Sathanur, Kalmara Park, People
× RELATED மாமல்லபுரம் கடற்கரை கோயில்...