×

ஐசிஎப்பில் தயாரிக்கப்பட்ட 7,000 பழைய ரயில் பெட்டிகளை ஒதுக்கி தள்ளமுடிவு

சென்னை: சென்னை பெரம்பூர் ஐ.சி.எப்பில் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட 7 ஆயிரம் ரயில் பெட்டிகளை ஒதுக்கி தள்ள ரயில்வே நிர்வாகம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்திய ரயில்வேயில் தற்போது 60 ஆயிரம் ரயில் பெட்டிகள் செயல்பாட்டில் உள்ளன. அதில் பல ரயில் பெட்டிகள் பல ஆண்டுகளுக்கு முன்னதாக தயாரிக்கப்பட்டவை ஆகும். இந்த ரயில் பெட்டிகள் 60 கிலோமீட்டர் வேகத்தில் மட்டும் இயங்கும் திறன் கொண்டது. ஆனால் தற்போது விரைவு ரயில் 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. இதையடுத்து இந்த ஆண்டு 7 ஆயிரம் பழைய பெட்டிகளை ஒதுக்கி தள்ள இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மாற்றாக ஜெர்மன் தொழில் நுட்பத்துடன் நவீன வசதிகளோடு ஐ.சி.எப்பில் தயாரிக்கப்படுகின்ற ரயில் பெட்டிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags : ICF , 7,000 old train carriages made in ICF were pushed aside
× RELATED 250 ரயில்வே ஊழியர்கள் கைது