திராவிடம், ஆரியம் பிரித்துப்பார்ப்பது தவறு பாஜவினர் செல்வாக்கை வளர்க்க இந்துத்துவாவை அழுத்தமாக கூறுவார்கள்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கருத்து

திருச்செந்தூர்: திராவிடம், ஆரியம் என்று  பாஜவினர் பிரித்துப்பார்ப்பது தவறு, என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று காலை சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டி: அதிமுகவே மீண்டும் ஆட்சியமைக்கும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராவார். தமிழகம், முதல்வர் எடப்பாடி கையிலும், இந்தியா பிரதமர் கையிலும் பாதுகாப்பாக உள்ளது. மனு தர்மத்தில் பெண்களை பற்றி அவதூறான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளதாக திருமாவளவன் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மனு தர்மத்தில் நல்ல பல கருத்துக்கள் உள்ளன. ரஜினி அரசியலுக்கு வந்தாலும், வராவிட்டாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். திராவிடம், ஆரியம் என்று பிரித்துப் பேசுவது தவறு. அண்ணாவே ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்றுதான் கூறினார். எனவே ஆரியம், திராவிடம் என்று பிரிக்க வேண்டாம். பாஜவினர் தங்கள் செல்வாக்கை வளர்க்க இந்துத்துவா கொள்கையை கொஞ்சம் அழுத்தமாக கூறுவார்கள். இவ்வாறு ராஜேந்திரபாலாஜி கூறினார்.

Related Stories:

>