தமிழகத்தில் ஒரே நாளில் 2,511 பேருக்கு தொற்று: சுகாதாரத் துறை அறிவிப்பு

சென்னை: தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் நேற்று 70,767 பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 2,511 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 690 பேர், செங்கல்பட்டு 148, கோவை 241, சேலம் 145, திருவள்ளூர் 133 என மாநிலம் முழுவதும் 2,511 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சேர்த்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 24 ஆயிரத்து 522 ஆக உயர்ந்துள்ளது. மாநில அளவில் 4 லட்சத்து 37 ஆயிரத்து 290 ஆண்கள், 2 லட்சத்து 87 ஆயிரத்து 200 பேர் பெண்கள், 32 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 3,848 பேர் குணமடைந்தனர். தற்போது வரை 6 லட்சத்து 91 ஆயிரத்து 236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 23 ஆயிரத்து 532 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 31 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,122 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>