ஆர்பிஎப் சார்பில் தேசிய ஒற்றுமை நாள்

சென்னை: சர்தார் வல்லபாய் படேலின் 145வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று ரயில்வே பாதுகாப்புப்படை சார்பில் தேசிய ஒற்றுமை நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ் கலந்து கொண்டார்.

நாடு முழுவதும் அக்டோபர் மாதம் 31ம் தேதி சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை தேசிய ஒற்றுமை நாளாக கொண்டாடப்படுகிறது. நேற்று சர்தார் வல்லபாய் படேலின் 145வது பிறந்தநாளை முன்னிட்டுரயில்வே பாதுகாப்புப்படை சார்பில் தேசிய ஒற்றுமை நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பொது மேலாளர் ஜான் தாமஸ் தலைமை தாங்கினார். தொடர்ந்து அனைவரும் தேசிய ஒற்றுமைப்பாடு குறித்து உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இதையடுத்து ரயில்வே பாதுகாப்புப்படை முதன்மை தலைமை பாதுகாப்புப்படை கமிஷனர் பிரேந்திர குமார் தலைமையில் பாதுகாப்புப்படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தெற்கு ரயில்வே மூத்த அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்புப்படை வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>