×

புதுச்சேரியில் கலைஞர் பெயரில் மாணவர்களுக்கு சிற்றுண்டி திட்டம்: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் 145வது பிறந்தநாள் விழா மற்றும் இந்திரா காந்தி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. புதுச்சேரி மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கலந்து கொண்டு படேல், இந்திராகாந்தி ஆகியோரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  பின்னர் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கு 6 மாத காலமே உள்ளதால் ஒருபுறம் காங்கிரஸ் கட்சிகாரர்களை ஒருங்கிணைக்க வேண்டும். மற்றொருபுறம் எதிர்க்கட்சிகளை சாடி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வியூகம் அமைக்க வேண்டும். தேர்தல் வருவதால் இனி வரும் காலங்களில் முக்கியமான 5 திட்டங்களை செய்ய உள்ளோம்.

அதில், முதலாவதாக அனைவருக்கும் மருத்துவ காப்பீடு திட்டம். 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்குச் சிற்றுண்டி திட்டம். இதில் இட்லி, கிச்சடி, பொங்கல் போன்றவை வழங்கப்படும். இந்த திட்டம் நவ.12ம் தேதி கலைஞர் கருணாநிதி பெயரால் கொண்டுவரப்படுகிறது. மூன்றாவதாக, அரசு பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக பாப்டாப் (கைப்பேசி) வழங்கும் திட்டம். இலவச குடிநீர் திட்டம், 100 யூனிட் வரை மின்சாரம் இலவசம் ஆகிய திட்டங்களை கொண்டு வரவுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Narayanasamy ,artist ,Pondicherry ,announcement , Snack program for students in the name of artist in Pondicherry: Chief Minister Narayanasamy's announcement
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளரின் காரில் சோதனை