தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தென் சென்னை வடக்கு மாவட்ட முப்பெரும் விழா: விக்கிரமராஜா பங்கேற்பு

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தென்சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் முப்பெரும் விழா கோயம்பேட்டில் நடந்தது. மாவட்ட தலைவர் ஒய்.எட்வர்ட் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர்கள் என்.பி.முருகன், எஸ்.கோதண்டம் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஆர்.நீலமேகம் வரவேற்றார். பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா புதிய அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். மாநில பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா பெயர் பலகையினை திறந்து வைத்தார். மாநில துணை தலைவரும், கோயம்பேடு அனைத்து காய்கறி வணிக வளாக கூட்டமைப்பு தலைவருமான ஜி.டி.ராஜசேகர் சங்க கொடி ஏற்றி வைத்தார். மேலும் விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: பண்டிகை காலத்தை கவனத்தில் கொண்டு கோயம்பேடு வணிக வளாகம் முழுமையாக இயங்குவதற்கான தேதிகளை அறிவித்த முதல்வர் பழனிசாமிக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம், என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>