இசான் கிசான் அதிரடி: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி

துபாய்: ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் துபாயில் இன்று நடந்த 51வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ்  அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர்- 25, ரிஷப் பண்ட் 21 ரன்களும் எடுத்தனர். பந்து வீச்சை பொருத்தவரை மும்பை அணியில் அதிகபட்சமாக பவுல்ட் , பும்ரா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 14.2 ஒவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது. இதனையடுத்து மும்பை அணி 13 போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 1 வது இடத்தில உள்ளது.

Related Stories:

>