திருப்பரங்குன்றம் கோயிலில் பவுர்ணமி கிரிவலம் ரத்து

திருப்பரங்குன்றம்: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கூட்டம் கூடுவதை தவிர்க்க திருப்பரங்குன்றம் கோயிலில் பவுணர்மி கிரிவலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் உள்ள மலையை பவுர்ணமி தோறும் பக்தர்கள் கிரிவலம் சுற்றுவது வழக்கம். இந்த கிரிவலத்தில் மதுரை மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர்.

ஐப்பசி மாத பவுர்ணமி நாளான இன்று (அக்.31) நடைபெற இருந்த பவுர்ணமி உற்சவ விழா மற்றும் கிரிவலம் கொரானா பரவல் காரணாக ரத்து செய்யப்படுகிறது. எனவே பக்தர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என கோயில் நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.

Related Stories:

>