கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

கொடைக்கானல்:  கொடைக்கானலில் விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருந்தது. நேற்று அரசு விடுமுறை என்பதால் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்து சென்றனர்.

பாஸ் பெற்றுவரும் இந்த சுற்றுலா பயணிகள் தற்போது திறந்திருக்கும் மூன்று பூங்காக்கள் மற்றும் கோக்கர்ஸ் வாக் பகுதியில் இயற்கை அழகை  கண்டு ரசித்து சென்றனர். நேற்று மதியம் முதல் சாரல் மழை பெய்தது. கொடைக்கானலில் நேற்று காலை முதலே குளிர் அதிக அளவில் இருந்தது. இந்த இரண்டு மாறுபட்ட சூழல்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர்.

Related Stories:

>