×

போடியில் நெல் நடவு பணியால் கொக்குகள் படையெடுப்பு

போடி: போடி பகுதியில் ஒரு போகம் நெல் நடவுப்பணி மூன்று வாரங்களாக தீவிரமாக நடந்து வருகிறது. போடி அருகே கொட்டகுடி, குரங்கணி,  முந்தல், மேலப்பரவு, கீழப்பரவு, அணைக்கரைப்பட்டி, பொட்டல்களம், கோடங்கிபட்டி, தோப்புப்பட்டி, காமராஜபுரம், உப்புக்கோட்டை, கூழையனூர் வரை  1500 ஏக்கர் அளவு ஒரு போக நெல்விவசாயம் வருடம் ஒரு முறை நடந்து வருகிறது.

இந்த நெல் சாகுபடிக்கு போடி அருகே கொட்டகுடி மற்றும் முல்லைப் பெரியாறு ஆறுகளின் பாசனமே துணையாக உள்ளது. தற்போது இப்பகுதிகளில்  டிராக்டர் மூலமாக சேற்று உழவு செய்து நடவுக்கு நிலங்களை விவசாயிகள் தயார் படுத்துகின்றனர்.இந்த வயல் வெளிகளில் ஆயிரக்கணக்கான கொக்குகள் இரையெடுக்க படையெடுத்து வருகின்றன. இதனை அப்பகுதி மக்கள் செல்போனில் படம்  எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.Tags : Invasion ,Bodi , Invasion of cranes by paddy planting in Bodi
× RELATED பட்டிவீரன்பட்டி பகுதியில் நெல் நடவு பணி துவக்கம்