×

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி...!! இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு; 786 பேர் காயம்

துருக்கி: துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.0 எனப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையோரமாக இருக்கும் இஸ்மிர் நகரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. பயங்கர நிலநடுக்கத்தால் அடுக்குமாடி குடியிருப்பு சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது.  இங்கு 20-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து முற்றிலும் சேதடைந்தன. கட்டிட இடிபாட்டிற்குள் பலர் சிக்கியிருக்கலாம் எனவும், முதற்கட்டமாக 14 பேர் உயிரிழந்ததாகவும், 419 பேர் காயம் அடைந்ததாகவும் துருக்கி அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளதாகவும், 786 பேர் காயமடைந்துள்ளதாக பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தால் இஸ்மிர் நகரமே உருகுலைந்து போயுள்ளது. ஆங்காங்கே கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளது. கட்டிட இடிபாட்டிற்குள் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும், பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், துருக்கியில் நிலநடுக்கத்திற்கு பின் 196 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.  இவற்றில் 4க்கு கூடுதலாக ரிக்டர் அளவு கொண்ட நில அதிர்வுகள் 23 முறை ஏற்பட்டு உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



Tags : Turkey ,earthquake , Turkey devastated by earthquake ... !! Death toll rises to 22; 786 people were injured
× RELATED துருக்கியில் உள்ளூர்...