×

கொரோனா தடுப்பு நடவடிக்கை விதிகளை மீறி காமாட்சி அம்மன் கோயிலில் பொன்.ராதாகிருஷ்ணன் தரிசனம்: பொதுமக்கள், பக்தர்கள் அதிருப்தி

காஞ்சிபுரம்,  அக்.31: கொரோனா விதிகளை மீறி, காஞ்சி. காமாட்சி அம்மன் கோயிலில் பொன்.ராதாகிருஷ்ணன் தரிசனம் செய்தார். இதனால் பக்தர்களும், பொதுமக்களும் அதிருப்தியடைந்தனர். முன்னாள் மத்திய இணை அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், சித்திரகுப்தர், குமரகோட்டம் முருகன், ஏகாம்பரநாதர் ஆகிய கோயில்களில் தரிசனம் செய்தார். பின்னர், காமாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றார்.அரசு அனுமதித்த தரிசன நேரம் முடிந்த பிறகு 15 நிமிடம் தாமதமாக கோயிலுக்கு வந்த அவர், 30க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை விதிகளை மீறி, சாமி தரிசனம் செய்தார்.

காலை 8 மணிக்கு வெளியே வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேல் யாத்திரை நிறைவு பெறும்போது பல விஷயங்களுக்கு தெளிவு தானாக பிறக்கும். நடிகர் ரஜினிகாந்த் தெளிவாக தனது விளக்கத்தை அளித்துவிட்டார். இதில் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்றார். பாஜ முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தனது தொண்டர்களுடன் கொரோனா விதிமீறி கோயிலில் தரிசனம் செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Tags : darshan ,Pon.Radhakrishnan ,temple ,devotees ,Kamatchi Amman ,Public , Pon. Radhakrishnan darshan at Kamatchi Amman temple in violation of corona prevention rules: Public, devotees dissatisfied
× RELATED தர்ஷன், அஞ்சு குரியன் நடித்த எண்ட ஓமனே