×

போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

பொன்னேரி: பொன்னேரியில் போக்குவரத்து பணிமனையின் முன் தொமுச உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய சூழலில் அதிகாரிகள் பேச்சுவார்த்தையை நடத்தாமல் இழத்தடிப்பதற்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.
14வது ஊதியக்குழு ஒப்பந்தத்தின் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு ஊதியஉயர்வு அளிப்பதற்கான பேச்சுவார்த்தையை அதிகாரிகள் உடனே தொடங்க வேண்டும். தீபாவளி போனஸ் உடனே தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.  வேலை நிறுத்தம் செய்ய போக்குவரத்து தொழிலாளர்கள் விரும்பவில்லை எனவும் உடனடியாக தமிழக அரசு தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண முன்வர வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Tags : Transport workers , Transport workers protest
× RELATED கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தம்...