×

சலுகை, இலவச பாஸ்களை பரிசோதிக்க வேண்டும்: எம்டிசி அறிவுறுத்தல்

சென்னை: எம்டிசி பஸ்களில் சலுகை மற்றும் இலவச பயண அட்டைகளை கொண்டு பயணிப்பவர்களிடமிருந்து, அந்த அட்டைகளை வாங்கி பரிசோதிக்க வேண்டும் என ஊழியர்களுக்கு எம்டிசி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.  இதுகுறித்து எம்டிசி ஊழியர் ஒருவர் கூறியதாவது:  நடத்துனர்கள் தமது பணியின்போது பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடமிருந்து அனைத்து வகையான சலுகை பயண அட்டை மற்றும் இலவச பயண அட்டைகளை வாங்கி பரிசோதித்து அறிய வேண்டும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது. போலி என தெரிந்தால் பறிமுதல் செய்து எம்டிசி தலைமையகத்தில் பேருந்து தடம் எண் மற்றும் பேருந்து விவரங்களுடன் mtcplanningdevelopment@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

கண்காணிப்பாளர்கள், உதவிபொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் மற்றும் பணிமனைகளில் பணிபுரியும் அனைத்து கண்காணிப்பாளர்களும் ஒவ்வொரு வாரமும் ஏதேனும் இரு தினங்களில் காலை அலுவலகம் வரும் வழித்
தடங்களிலும், அலுவலகத்திலிருந்து இல்லத்திற்கு செல்லும் வழித்தடங்களிலும் பயணிகளிடமிருந்து அனைத்து வகையான சலுகை மற்றும் இலவச பயண அட்டைகளை வாங்கி பரிசோதித்து அறிய வேண்டும்.என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார். இதற்கிடையில், அனைத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் தவறாது வருகை பதிவேட்டில் கையொப்பமிட வேண்டும் என போக்குவரத்துக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

Tags : Offer to check out free passes: MTC instruction
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...