பாஜவின் வெற்றிவேல் யாத்திரை திருத்தணியில் 6ம் தேதி தொடக்கம்

சென்னை: தமிழக பாஜ மாநில துணை தலைவரும், வெற்றிவேல் யாத்திரை பொறுப்பாளருமான கே.எஸ்.நரேந்திரன் வெளியிட்ட அறிவிப்பு: தமிழக பாஜ மாநில தலைவர் எல்.முருகனின் வெற்றிவேல் யாத்திரைதமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இவ்வெற்றிவேல் யாத்திரையானது நவம்பர் 6ம் தேதி திருத்தணியில் துவங்கி டிசம்பர் 6ம் தேதி திருச்செந்தூரில் நிறைவடைகிது. இந்த யாத்திரை 6ம் தேதி திருத்தணி முருகன் கோவில், திருவள்ளுர் மேற்கு, திருவள்ளுர் கிழக்கு, மேற்கு சென்னை. 8ம் தேதி வட சென்னை கிழக்கு, வட சென்னை மேற்கு, மத்திய சென்னை மேற்கு, மத்திய சென்னை கிழக்கு, தென் சென்னை, கிழக்கு சென்னை. 9ம் தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மாவட்ட வாரியாக  யாத்திரை செல்லும் இடங்களும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>