×

மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக 45 லட்சம் மோசடி

அண்ணாநகர்: அரும்பாக்கத்தை சேர்ந்தவர் ரேவதி (45).  இவரது மகளுக்கு மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி, குடும்ப நண்பர் விருகம்பாக்கத்தை சேர்ந்த உமா மகேஷ்வரன் (50) என்பவர், ₹45 லட்சம் பெற்றுள்ளார். ஆனால், சீட் வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தராமல் குடும்பத்துடன் தலைமறைவானார். இதுகுறித்து ரேவதி, அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு தலைமறைவான உமாமகேஷ்வரனை நேற்று முன்தினம் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : 45 lakh scam to buy seats in medical college
× RELATED விழுப்புரம் அருகே தனியார் நிதி...